20.08.1976
அன்று அவருக்குத் திருமணம் நடைபெற்றது. மனைவி பெயர் திருமதி. ரெங்கநாயகி.இவர்களுக்கு திரு. பிரேம்குமார் என்று மகனும் உள்ளார். அவரும் வழக்கறிஞரே!
6.7.1944
கன்னியாகுமரி மாவட்டம் இலந்தவிளை கிராமத்தில் திரு. கந்தசாமி நாடார், திருமதி.தங்கம் அம்மாள் ஆகியோரின் மகனாகப் பிறப்பு. மூத்த அண்ணன் திரு. K.ஆறுமுகப் பெருமாள். தங்கை திருமதி. பத்மாவதி.
1949
சொத்தவிளை தொடக்கப் பள்ளியில் ஆரம்பக் கல்வி
1955
புத்தளம் லண்டன் மிஷன் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்தல்.
1960
பள்ளி இறுதித் தேர்வில் (SSLC) தேர்வு பள்ளியில் 2nd Rank.
1960-81
பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் புகுமுக வகுப்பு.
1961-64
தூய யோவான் கல்லூரியில் இளம் அறிவியல் (BSC) கணிதப் பாடம் பயின்று தேர்ச்சி.
1964-66
உடுமலைப் பேட்டையில் ஆசிரியர் பணி. ஆசிரியர் திரு. A.V. கோவிந்தராஜ் அவர்களின் நட்பு. அவர் தான் சட்டம் படிக்க வழிகாட்டினார். அவர் மூலம் நீதிபதி மோகன், முன்னாள் அமைச்சர் S.J.சாதிக் பாட்சா ஆகியோருடன் தொடர்பு.
1966-68
சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று தேர்ச்சி பெறல்.
29.01.1969
நாகர்கோவில் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்தல்.
1971
பகுதி நேர MA Public Administration படிப்பில் பட்டம் பெற்றார்.
1969-1975
ஆறு ஆண்டுகள் மூத்த வழக்கறிஞர் திரு. பாக்கியராஜ் அவர்களின் மேற்பார்வையில் பணியாற்றுதல்.
1975
தனியாக வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்குதல்
20.08.1976
அன்று திருமணம். திருமதி. ரெங்கநாயகி அம்மாளை வாழ்க்கைத் துணைவியாகக் கரம் பிடித்தார்.
1980
அயுள் காப்பீட்டுக் கழக சட்ட ஆலோசகராகப் பொறுப்பேற்றல்.
1985
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் சட்ட ஆலோசகராகப் பணியைத் தொடங்குதல்.
1995
விஷ்வ ஹிந்து பரிஷத்தின் இந்து வித்யாலயா பள்ளிகளின் சட்ட ஆலோசகராக பணியேற்றல்.
2000
கூடன்குளம் அணுமின் நிலைய சட்ட ஆலோசகர்.
2017
விஷ்வ ஹிந்து பரிஷத்தின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பொறுப்பு.